முகப்பு
இந்தியா

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண அரசியல் முயற்சி அவசியம்: ஃபரூக் அப்துல்லா

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் ரீதியிலான முயற்சி எடுக்கப்படுவது அவசியம் என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:12 PM
பகிர்:

ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் ரீதியிலான முயற்சி எடுக்கப்படுவது அவசியம் என்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.
ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்கு வரும் 9-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில், தேசிய மாநாட்டுக் கட்சியின் வேட்பாளராக ஃபரூக் அப்துல்லா போட்டியிடுகிறார். இதையொட்டி, ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தால் ஏரி, ஹஜ்ரத்பால் பகுதிகளில் ஃபரூக் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
பொருளாதாரம், உள்கட்டுமானம் ஆகியவற்றில் வளர்ச்சி அவசியம். மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, நீண்டகாலமாக இருக்கும் காஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு அரசியல் ரீதியிலான முயற்சியை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாநிலம் தொடர்ந்து பாதிக்கப்படும்.
செனானி-நஸ்ரி இடையேயான சுரங்கப் பாதை, அரசியல் ரீதியிலான முயற்சிக்கு மாற்றாக சித்திரிக்கப்படுகிறது. இதன்மூலம், காஷ்மீர் அரசியல் பிரச்னையை மூடிமறைக்கும் மற்றொரு செயல் வெளிப்பட்டுள்ளது என்று ஃபரூக் அப்துல்லா கூறினார்.
நாட்டிலேயே மிகநீண்ட தூர சுரங்கப் பாதையாக கருதப்படும் செனானி-நஸ்ரி சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இந்நிலையில், ஃபரூக் அப்துல்லா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →