முகப்பு
இந்தியா

கறுப்பு பணத்தை தாமாக முன்வந்து ஒப்படைக்க மே 10-ம் தேதி வரை காலக்கெடு

கருப்பு பணத்துக்கு வரி மற்றும் அபராதம் செலுத்தியிருந்தால், அப்பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய கால அவகாசத்தை மே மாதம் 10-ம்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:21 PM
பகிர்:

புதுதில்லி: கருப்பு பணத்துக்கு வரி மற்றும் அபராதம் செலுத்தியிருந்தால், அப்பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய கால அவகாசத்தை மே மாதம் 10-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது.

கணக்கில் காட்டப்படாத வருமானத்தை வைத்திருப்போர் கூடுதல் வரி மற்றும் அபராதம் செலுத்தி, நடவடிக்கையில் இருந்து தப்பிக்க 'பிரதம கரீப் கல்யாண் யோஜனா' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருந்தது.

கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி தொடங்கிய இத்திட்டம், மார்ச் 31-ஆம் தேதி முடிவடைந்தது. இத்திட்டத்தின்படி, வரி, கூடுதல் வரி மற்றும் அபராதம் செலுத்தியவர்கள், வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்வதற்கு ஏப்ரல் 30-ஆம் தேதிவரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த கால அவகாசத்தை மே 10-ஆம் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மார்ச் 31-ஆம் தேதிக்கு முன்னர் வரி, கூடுதல் வரி மற்றும் அபராதம் செலுத்தியவர்கள் மற்றும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பு வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தவர்களுக்கு இந்த கால நீட்டிப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →