இந்தியா

காங்கிரஸ் இல்லா பாரதம் உருவாக்கும் முயற்சியில் பாஜக ஒருபோதும் வெற்றி பெறாது: ப.சிதம்பரம்

DIN

காங்கிரஸ் இல்லா பாரதம் உருவாக்கும் முயற்சியில், பாஜக ஒருபோதும் வெற்றி பெறாது என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், பனாஸ்கந்தா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக வெள்ளிக்கிழமை சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, சுட்டுரையில் ப.சிதம்பரம் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
ராகுல் காந்தியின் கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, பாஜகவின் மத்திய தலைமை கண்டனம் தெரிவிக்காதது ஏன்? பொய் குற்றச்சாட்டுகள், மோசடி, போராட்டங்களை ஒடுக்குவது, வன்முறை ஆகியவற்றின் மூலம் காங்கிரஸ் இல்லா பாரதத்தை உருவாக்கிவிடலாம் என்ற பாஜகவின் முயற்சிக்கு ஒருபோதும் வெற்றி கிடைக்காது என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே, ராகுல் காந்தியின் கார் மீதான தாக்குதல், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மேலும், தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் காங்கிரஸ் தொண்டர்கள் சனிக்கிழமை போராட்டங்களில் ஈடுபட்டனர்.
குஜராத் மாநிலம், ஆமதாபாத், சண்டீகர், மத்தியப் பிரதேசத் தலைநகர் போபால், மகாராஷ்டிரத் தலைநகர் மும்பை உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
மும்பையில் பாஜக கட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் காங்கிரஸார், அந்த அலுவலகத்துக்குள் பூக்களை வீசியெறிந்ததுடன், பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக கோஷமிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT