இந்தியா

திருமலையில் வெங்கய்ய நாயுடு

DIN

குடியரசு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள வெங்கய்ய நாயுடு, திருமலைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்தார். அங்கு அவர், வெங்கடாசலபதி கோயிலில் திங்கள்கிழமை காலை சுவாமி தரிசனம் செய்யவுள்ளார்.
இதையடுத்து, திருப்பதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளவுள்ளார். மேலும், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்தக் கிராமத்துக்கும் நாயுடு செல்லவுள்ளார்.
முன்னதாக, பெங்களூருவில் இருந்து ரேனிகுண்டா விமான நிலையத்துக்கு சிறப்பு விமானம் மூலம் வந்தார். அங்கிருந்து அவர், சாலை மார்க்கமாக காரில் திருமலைக்கு வருகை புரிந்தார்.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில், வெங்கய்ய நாயுடு 3}இல் 2 பங்கு வாக்குகள் பெற்று மிகப்பெரும் வெற்றியைப் பெற்றார். இதையடுத்து, குடியரசு துணைத் தலைவராக அவர் வரும் 11}ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT