இந்தியா

ஓஎன்ஜிசி குறித்து தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள்: அதிகாரி குற்றச்சாட்டு

DIN


கும்பகோணம்: ஓஎன்ஜிசி குறித்து போராட்டக்காரர்கள் தொடர்ந்து தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள் என்று அந்நிறுவனத்தின் அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.

கும்பகோணத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓஎன்ஜிசி அதிகாரி ராஜேந்திரன், கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாய் உடைப்பை சரி செய்ய முயன்றபோது அதனை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். ஓஎன்ஜிசி குறித்து தொடர்ந்து தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார்கள் என்று கூறினார்.

மேலும், ஓஎன்ஜிசி உலகத் தரத்திலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ஓஎன்நிஜி நடவடிக்கையால் விவசாயிகளுக்கோ மக்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. 

எரிசக்தி தேவை நிறைவேற்றப்பட்டால்தான் நாடு வளர்ச்சி அடையும். இப்படிப்பட்டநிறுவனத்தின் மீது நிலத்தடி நீர் மாசுபடுத்துவதாக குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT