இந்தியா

கூட்டணியில் சேர நிதீஷுக்கு அழைப்பு: அமித் ஷா

DIN

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும்படி, பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாருக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.

தில்லிக்கு வெள்ளிக்கிழமை வந்த நிதீஷ் குமார், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். இந்நிலையில், சுட்டுரையில் அமித் ஷா சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவுகளில், "நிதீஷ் குமாரை வெள்ளிக்கிழமை எனது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும்படி, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு அழைப்பு விடுத்தேன்' எனத் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்த அழைப்பை நிதீஷ் குமார் ஏற்றுக் கொண்டாரா? இல்லையா? என்பது குறித்து அமித் ஷா அந்தப் பதிவுகளில் குறிப்பிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT