பஞ்சாப் மாநிலம் அட்டாரி-வாகா எல்லை பகுதியில் உள்ள 360 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டது.
பஞ்சாப் மாநிலம், அட்டாரி-வாகா எல்லை பகுதியில் ரூ.3.50 கோடி செலவில் 55 டன்எடையும், 24 மீ்ட்டர் அகலம், 360 மீட்டர் உயரமும் கொண்ட நாட்டிலேயே மிக உயரமான தேசிய கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 120 அடி நீளமும், 80 அடி அகலும் கொண்ட இந்திய தேசிய கொடியை ஏற்றும் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பஞ்சாப் மாநில அமைச்சர் அனில் ஜோஷி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
வாகாவில் இருநாட்டு எல்லை பகுதியில் தினசரி கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது குறிப்பிடத்தக்கது.
பாக்கிஸ்தானில் இருந்து இந்திய தேசியக் கொடியை பார்க்க முடியும்.
மூன்று மாத இடைவெளியில் இன்று வாகா எல்லையில் தேசியக் கொடி பறக்க விடப்பட்டது. முக்கியமான சந்தர்ப்பங்களில் மட்டுமே இந்த கம்பத்தில் தேசியக் கொடி பறக்க விடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.