இந்தியா

கோரக்பூரில் ரூ.85 கோடியில் மருத்துவ ஆய்வு மையம்: மத்திய அரசு ஒப்புதல்

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் ரூ.85 கோடி செலவில் மருத்துவ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.
கோரக்பூர் அரசு மருத்துவமனையில் 5 நாள்களில் 60 குழந்தைகள் வரை உயிரிழந்துவிட்டனர். ஆக்சிஜன் பற்றாக்குறைதான் இந்த சோக நிகழ்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த மருத்துவமனைக்கு ஜே.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அவருடன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் நட்டா கூறியதாவது:
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள கோரக்பூரில் ரூ.85 கோடி செலவில் பிராந்திய மருத்துவ மையம் அமைக்கப்படும். நான் கோரக்பூருக்கு புறப்படுவதற்கு முன்பே இதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துவிட்டது.
குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் குறித்தும், அவற்றைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த மருத்துவ மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும். கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது இது தொடர்பாக யோகி ஆதித்ய நாத்துக்கு நான் உறுதியளித்தேன்.
குழந்தைகள் உயிரிழப்பு குறித்து பிரதமர் மோடி மிகுந்த கவலையடைந்துள்ளார். உத்தரப் பிரதேசத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும் என்றார் அவர்.
யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக உயர் நிலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர் போதிய அளவுக்கு இல்லை என்ற குற்றச்சாட்டும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் கொசு உள்ளிட்டவற்றால் பரவக்கூடிய நோய்கள் அதிகம் உள்ளன. புவியியல் அமைப்புரீதியாகவே கிழக்கு உத்தரப் பிரதேசம் இந்த பாதிப்பை எதிர்கொள்கிறது.
இதனால், இங்கு குழந்தைகளுக்கு அதிக அளவில் நோய் ஏற்படுகிறது. பிரதமர் மோடி நமது மாநிலத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனையைத் தந்துள்ளார். அதேபோல வைரஸால் பரவும் நோய்களைத் தடுப்பது குறித்த ஆய்வு மையம் அமைவது அவசியம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

SCROLL FOR NEXT