இந்தியா

ஆக்ஸிஜன் சிலிண்டர் வாங்க பணம் இல்லையா? மணீஷ் சிசோடியா கேள்வி

DIN

கோரக்பூர் மருத்துவமனையில் உயிர்காக்கும் பிராண வாயு உருளைகளை வாங்குவதற்கு ஆளும் பாஜக அரசுக்குப் பணம் இல்லையா? என்று  தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மருத்துவமனையில் போதிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாத காரணத்தால் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியானதாக கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து  தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஞாயிற்றுக்கிழமை கூறியது:
நமது அரசு அமைப்பில், சுவாசிக்கப் பயன்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போதிய அளவு இல்லாமல் 60-70 குழந்தைகள் இறக்க நேரிடும் நிலையில் பாரத் மாதா கீ ஜெய், வந்தே மாதரம் என்று முழக்கமிட்டு என்ன பலன்? இந்த உலகத்தில் கண் திறந்து வாழ்ந்திருக்க வேண்டிய சிறு பிஞ்சுகள் இறந்துள்ளன.

இந்தச் சம்வபத்தைக் கேள்வியுற்ற போது  நடுக்கமாக உள்ளது.
எனவே, கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டருக்கான கட்டணம் தொடர்பான கோப்புகள் உத்தரப் பிரதேச அரசின் எந்தத் துறையில், எத்தனை நாள்கள், எந்த அதிகாரியின் மேஜையில்  கிடப்பில் இருந்தது என்பது தொடர்பான விவரங்களையும்,   40  ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தொடர்பான புகார்கள் மீது எந்தெந்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர் என்பது குறித்தும் அந்த மாநில அரசு தகவல் வெளியிட வேண்டும்.

மாநிலங்களவைத் தேர்தலில்  தனது இரண்டு உறுப்பினர்களை வெற்றி பெறச் செய்வதற்கு எம்எல்ஏக்களை விலை பேசுவதற்கு பாஜகவுக்கு பணம் உள்ளது.

ஆனால், கோரக்பூர் மருத்துவமனையில் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்குவதற்கு  உத்தரப் பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜக அரசுக்கு பணம் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார் மணீஷ் சிசோடியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT