இந்தியா

ஜார்க்கண்ட் வாசிக்கு ரூ.3800 கோடி மின் கட்டணம்: மின்சார பில்லிலேயே ஷாக் கொடுத்த மின்சாரத் துறை

மின்சாரத்தைத் தொட்டால்தான் ஷாக் அடிக்கும், இங்கே ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்புரில் மின்சாரக் கட்டணத்தை பார்த்தவருக்கு ஷாக் அடித்திருக்கிறது.

DIN


ஜாம்ஷெட்புர்: மின்சாரத்தைத் தொட்டால்தான் ஷாக் அடிக்கும், இங்கே ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்புரில் மின்சாரக் கட்டணத்தை பார்த்தவருக்கு ஷாக் அடித்திருக்கிறது.

பி.ஆர். குஹா என்பவர், மின்சார கட்டணத்தைக் கட்டாததால், அவரது வீட்டின் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது. அவர் கட்ட வேண்டிய மின்சாரக் கட்டணம் ரூ.3800 கோடி என்று மின்சார வாரியம் கூறியுள்ளது. இதை அறிந்த குஹா கடும் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து ஏஎன்ஐ செய்தியாளரிடம் பேசிய குஹா, இது எங்களுக்கு பயங்கர ஆச்சரியத்தை அளித்தது. இது எப்படி நடந்திருக்கும் என்று புரியவில்லை. எங்கள் வீட்டில் 3 அறைகள்தான் இருக்கின்றன. 3 மின் விசிறிகளும், 3 மின் விளக்குகளும், டிவி மட்டுமே உள்ளன. எப்படி இந்த அளவுக்கு மின் கட்டணம் வந்திருக்கும்? என்று புரியவில்லை என்கிறார்.

இது குறித்து புகார் பதிவு செய்துள்ளது, இந்த தவறு எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து மின்சார வாரியம் விசாரணை நடத்தி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசியத் தொடர் சம்பளம் ராணுவத்துக்கு நன்கொடை! சூர்ய குமார்

தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!

கரூர் பலி: நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன! - ப.சிதம்பரம்

கரூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

வீட்டைவிட்டு புறப்பட்ட விஜய்! எங்கே சென்றார்?

SCROLL FOR NEXT