இந்தியா

103 வயது சுதந்திரப் போராட்டத் தியாகி தேசியக் கொடி ஏற்றினார்

DIN

நாடு முழுவதும் ஆக்ஸட் 15-ந் தேதி (இன்று) 71-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தின.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, புதுதில்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இந்தியாவின் 14-ஆவது குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் அம்மாநில முதல்வர்கள் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தின நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். 

இந்நிலையில், இந்தியாவின் 71-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தின் புருலியா மன்பஸார் என்ற இடத்தில் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 103 வயது சுதந்திரப் போராட்டத் தியாகி பிஜய் குமார் தத்தா, தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT