இந்தியா

தமிழகத்தை பின்பற்றும் கர்நாடகம்: 'ரூ.5-க்கு உணவு' இந்திரா கேன்டீன் திறந்தார் ராகுல்

DIN

கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, மார்ச் 15-ந் தேதி அம்மாநிலம் முழுவதும் மலிவு விலை உணவகங்களை திறக்கும் திட்டத்தை அறிவித்தார். இதனால் அம்மாநிலம் முழுவதும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் முதற்கட்டமாக மொத்தம் 101 மலிவு விலை உணவகங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டது. இந்த உணவகத்தில் ரூ.5-க்கு காலை சிற்றுண்டி மற்றும் மதிய, இரவு உணவு ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தின் இந்த மலிவு விலை உணவகங்களுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திரா கேன்டீன் என்ற பெயரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இதனை, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், திறந்து வைத்தார். பெங்களூரு வந்த ராகுல், கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா முன்னிலையில் இந்த திட்டத்தை துவங்கினார். 

இதுகுறித்து ராகுல் கூறியதாவது:

காங்கிரஸ் அரசாங்கம் இந்த திட்டத்தை அமல்படுத்தியதை நினைத்து பெருமை கொள்கிறேன். அனைவருக்கும் உணவு கிடைக்கும் இந்த திட்டத்தை முறைப்படுத்திய கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள். பெங்களூரு நகரில் இனி யாரும் பசியுடன் உறங்கமாட்டார்கள். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும் என்றார்.

முதன்முறையாக இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கடந்த 2013-ம் ஆண்டு அரசு சார்பில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. இதனை அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இது அவரது கனவு திட்டமாக இருந்தது. இந்த திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT