இந்தியா

நீட்: தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசனை கேட்டிருக்கும் மத்திய அரசு

DIN


புது தில்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன் வரைவு குறித்து தலைமை வழக்குரைஞர் வேணுகோபாலிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது.

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதில் இருந்து தமிழகத்துக்கு ஒரு ஆண்டுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்ட முன்வரைவு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் சட்ட முன்வரைவு தொடர்பாக தலைமை வழக்குரைஞர் வேணுகோபாலிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது. இது குறித்து இரண்டு நாட்களுக்குள் வேணுகோபால் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, நீட் விவகாரம் தொடர்பாக சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி. சவுத்ரியை, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பிதுரையுடன் தில்லியில் சந்தித்துப் பேசியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT