இந்தியா

கிலோ நூறு ரூபாய்க்கு விற்ற தக்காளியை திருடிய நபர் கைது

DIN


மும்பை: தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையான சமயத்தில், சுமார் 900 கிலோ தக்காளியைத் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மும்பையின் புறநகர்ப் பகுதியான தஹிசரில் உள்ள காய்கறி சந்தையில் உள்ள கடை ஒன்றில் இருந்து கடந்த ஜூலை 18ம் தேதி சுமார் 900 கிலோ தக்காளி காணாமல் போனது. இந்த சம்பவத்தில், சுமார் 57 ஆயிரம் மதிப்புள்ள தக்காளியை டெம்போவில் வைத்து திருடிச் சென்ற ராதேஷ்யாம் குப்தா (54) கைது செய்யப்பட்டார்.

கடையின் அருகில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குர்லாவில் இருக்கும் குப்தாவின் வீட்டில் வைத்து காவல்துறையினர் கடந்த மாதம் அவரை கைது செய்தனர். அவரை காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

குப்தா ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்று தெரிய வந்துள்ளது. மேலும் தக்காளி திருடிய சம்பவத்தில் அவர் மேலும் சிலருடன் சேர்ந்து ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

தக்காளி கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட போது தக்காளி ஏற்றி வந்த வாகனங்களுக்கு ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டதும், காய்கறி சந்தைகளில் தக்காளி கடைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டதும் நினைவிருக்கலாம்.

மேலும் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் சார்பில் தக்காளி வங்கியும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகாலாந்தில் 3-ஆவது நாளாக கடையடைப்பு: பொருள்கள் வாங்க அஸ்ஸாம் செல்லும் மக்கள்

செஸ் வீரா் குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்

பரமத்தி வேலூா் விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தி விழா

காங்கிரஸின் ஆபத்தான வாக்கு வங்கி அரசியல்: பிரதமர் மோடி

திருச்செங்கோடு தோ்த் திருவிழாவுக்கு கொடி சேலை அளிப்பு

SCROLL FOR NEXT