இந்தியா

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு அழைப்பு

DIN

பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை:-
இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.டி.சிபுலால், குமாரிசிபுலால் ஆகியோர் இணைந்து சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையை 1999-ஆம் ஆண்டில் தொடங்கினர். இந்த அறக்கட்டளை கல்வி, சுகாதாரம், இயற்கை வேளாண்மை, ஊட்டச்சத்து, சமூக நலம் ஆகிய துறைகளில் நாடு முழுவதும் பங்காற்றி வருகிறது.
அறக்கட்டளையின் மூலம் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைக் கல்வி பெற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.54 ஆயிரம் வரை வழங்கி வருகிறது.
தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைவழங்க பங்காற்றியுள்ளோம். இதுவரை 5 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் நாடுமுழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். உண்மையில் பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் படிப்பதில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தான் உதவிசெய்துவருகிறோம்.
தமிழகத்தில் 2017-ஆம் ஆண்டு நடந்த பத்தாம் மற்றும் பிளஸ் 2 தேர்வில் முறையே 90 சதவீதம் மற்றும் 85 சதவீதம் மதிப்பெண்(மாற்றுத்திறனாளி மாணவர்கள் 75 சதவீதம் பெற்றிருந்தால் போதுமானது) பெற்ற மாணவர்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.vidyadhan.org என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பங்களை செலுத்தவேண்டும். விண்ணப்பங்களை ஆக.31-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு tamilnadu@sdfoundationindia.com என்ற மின்னஞ்சல் அல்லது 07339659929 என்ற தொலைபேசியில் அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT