இந்தியா

இலங்கையில் விசா காலம் முடிந்த 27 இந்தியர்கள் கைது

DIN

கொழும்பு: விசா காலம் முடிந்த பிறகும் இலங்கையை விட்டு வெளியேறாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 பெண்கள் உட்பட 27 இந்தியர்களை அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வேலை தேடி இலங்கைக்கு அதிகளவில் செல்கின்றனர். குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அதிகயளவில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், விசா காலம் முடிந்தும் இலங்கையை விட்டு வெளியேறாமல் சட்டவிரோதமாக தங்கியிருந்த 5 பெண்கள் உட்பட 27 இந்தியர்களை அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அதிகபட்சமாக தமிழர்கள் அதிகளவில் வசிக்கும் ஜாப்னா நகரில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் எதுவும் அதுவரை வெளியிடப்படவில்லை.

கைது செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமானோர் ஜோதிடம் பார்க்கும் பணியை செய்துவந்தவர்கள் என்றும் மற்றவர்கள் இதர தொழிலில் ஈடுபட்டு வந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT