இந்தியா

தலாக் விவாகரத்து முறை முழுமையாக ஒழியவில்லை

DIN

முத்தலாக் நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தாலும், இஸ்லாமிய சமூகத்தில் பின்பற்றப்படும் இருவேறு வகையான தலாக் விவாகரத்து முறை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது என்று மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதனால் பாலின சம உரிமையை உறுதிசெய்வது சவாலாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மூன்று முறை தலாக் எனக் கூறி ஒரு பெண்ணை அவரது கணவர் விவாகரத்து செய்யும் முஸ்லிம் சமூக நடைமுறையை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அதிரடியாக ரத்து செய்தது. அதேவேளையில் தலாக் ஹசன், தலாக் அஹ்சன் ஆகிய நடைமுறைகள் ரத்து செய்யப்படவில்லை.
அதாவது ஒவ்வொரு மாத இடைவெளியில் மூன்று முறை தலாக் எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை தலாக் ஹசன் எனப்படுகிறது. அதேவேளையில், பெண்களின் மாதவிலக்கு காலங்களின் அடிப்படையில் தலாக் கூறி விவாகரத்து செய்யும் முறை தலாக் அஹ்சன் எனப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக ப.சிதம்பரம் சில கருத்துகளை சுட்டுரை (டுவிட்டர்) வாயிலாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
தலாக் என மூன்று முறை ஒரே நேரத்தில் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதேவேளையில், இஸ்லாமிய சமூகத்தில் நடைமுறையில் உள்ள இருவேறு தலாக் நடைமுறைகள் ரத்து செய்யப்படவில்லை. அவையும் பாலின சமஉரிமைக்கு சவாலாக விளங்கக் கூடும் என்று அதில் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

SCROLL FOR NEXT