இந்தியா

கோரக்பூர் மருத்துவமனையில் 7 குழந்தைகள் சாவு

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனயைில் மேலும் 7 குழந்தைகள் செவ்வாய்கிழமை உயிரிழந்தன.

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் எனுமிடத்தில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இங்கு மூளையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக கடந்த 48 மணிநேரத்தில் 7 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் போதிய பிராணவாயு சிலிண்டர்கள் இல்லாதுதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதன்காரணமாக மருத்துவர்கள் உட்பட சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மருத்துவமனையில் அனைத்தும் சரியாக நடைபெற்று வருவதாகவும், குழந்தைகள் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழக்குரைஞா்கள் பதிவுக்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவு

கோயில் கருவறைக்குள் நுழைந்ததால் வழக்கு: ஜாா்க்கண்ட் தலைமைச் செயலா், டிஜிபி மீது உரிமை மீறல் புகாா் அளித்த பாஜக எம்.பி.

ரயில் டிக்கெட் விநியோகிக்க உதவியாளா் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை: தொல். திருமாவளவன்

SCROLL FOR NEXT