இந்தியா

மண்டை ஓடு இல்லாத 24 வார கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

DIN

புது தில்லி: புணேவைச் சேர்ந்த கர்ப்பிணி வயிற்றில் வளர்ந்து வரும் மண்டை ஓடு இல்லாத 24 வாரக் கருவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கருவை பரிசோதித்த மருத்துவர்கள், 24 வாரக் கருவுக்கு மண்டை ஓடு இல்லை என்றும், அதற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று அறிக்கை அளித்ததை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், கருவைக் கலைக்க அனுமதி வழங்கியுள்ளது.

20 வயதான பெண், தனது வயிற்றில் வளரும் கருவுக்கு மண்டை ஓடு வளர வில்லை என்பதால், அது பிறந்தாலும், உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என்பதால், கருவைக் கலைக்க அனுமதிக்குமாறு கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவ அறிக்கையை ஏற்றுக் கொண்டு கருவைக் கலைக்க அனுமதி அளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT