இந்தியா

விவசாயிகள் பிரச்னை: பிரதமர் மோடி மீது ராகுல் தாக்கு

DIN

வேளாண் துறை மற்றும் விவசாயிகள் பிரச்னைகள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் தீர்க்கப்படவில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, சமூக வலைதளமான சுட்டுரையில் பாஜகவுக்கு எதிராக தினமும் ஒரு கேள்வியை அவர் எழுப்பி வருகிறார். அதன்தொடர்ச்சியாக, வியாழக்கிழமை அவர் விவசாயப் பிரச்னைகளை முன்வைத்து கேள்வி எழுப்பினார். அவரது பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
விவசாயக் கடன் தள்ளுபடி, உணவு தானியங்களுக்கான ஆதார விலை, பயிர்க்காப்பீட்டு திட்டப் பலன் என்று எதுவும் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. சரக்கு-சேவை வரிவிதிப்பு (ஜிஎஸ்டி) முறையால் வேளாண் துறை பாதிக்கப்பட்டது. விவசாயிகளின் நிலம் அபகரிக்கப்பட்டுவிட்டது. ஏன் விவசாயிகள் இவ்வாறு அணுகப்படுகிறார்கள் என்பதை பிரதமர் மோடி விளக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை

தூத்துக்குடி அருகே திருட்டு வழக்கில் இருவா் கைது

சாலை விபத்தில் இளைஞா் பலி

கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் மழை

திருமானூா் பகுதியில் காற்றுடன் மழை

SCROLL FOR NEXT