இந்தியா

குஜராத் இரண்டாம் கட்ட தேர்தல்: பகல் 12 மணி நிலவரப்படி 39 சதவீத வாக்குகள் பதிவு

DIN

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பகல் 12 மணி நிலவரப்படி 39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

குஜராத் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 93 தொகுதிகளில் நடைபெறும் இத்தேர்தலுக்காக 25,558 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதையொட்டி அந்தப் பகுதிகள் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. பகல் 12 மணி நிலவரப்படி குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 39 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

மொத்தம் 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 9-ஆம் தேதி 89 தொகுதிகளுக்கு முதல்கட்டத் தேர்தல் நடைபெற்றது. அதில் 68 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயக்குமார் உடல் கூறாய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்

பச்சகுப்பம்: பாலாற்றில் வெள்ளம்!

சினிமாவிலிருந்து விலகுவீர்களா? கங்கனா ரணாவத் பதில்!

ரூ. 35 கோடி பறிமுதல்: ஜார்கண்ட் அமைச்சரின் செயலர், பணியாளர் கைது

தேர்தல் பணியிலிருந்த அதிகாரி மாரடைப்பால் மரணம்!

SCROLL FOR NEXT