இந்தியா

குஜராத் தேர்தல் முடிவுகள் வெளியீடு: 6-ஆவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக

DIN

நடந்து முடிந்த குஜராத் மற்றும் ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி அரிதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கிறது.

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 9 மற்றும் 14–ந் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 89 தொகுதிகளுக்கு கடந்த 9–ந் தேதி நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில், 66.75 சதவீத வாக்குகள் பதிவானது. எஞ்சியுள்ள 93 தொகுதிகளுக்ககான இரண்டாவது கட்ட வாக்குப்பதிவில் 68.7 சதவீத வாக்குகள் பதிவானது.

மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்குகான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 99 இடங்களில் வெற்றிபெற்று 6-ஆவது முறையாக பாஜக ஆட்சிமைக்கிறது. காங்கிரஸ் 77 இடங்களிலும், சுயேட்சைகள் 6 இடங்களிலும் வெற்றி பெற்றனர். 

அதேபோல 68 தொகுதிகளை கொண்ட ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த நவம்பர் மாதம் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.   

மொத்தமுள்ள 68 தொகுதிகளில் இரவு 9 மணி நிலவரப்பபடி முடிவுகள் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் பாஜக 43 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 இடத்தில் முன்னிலையில் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்று, 2 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சைகள் 2 இடங்களில் வெற்றியுடன் 1 இடத்தில் முன்னிலைப் பெற்றுள்ளன. இதன் மூலம் அரிதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 35 இடங்களை பாஜக எளிதாகக் கடந்து வெற்றி பெற்றுள்ளது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT