இந்தியா

 2ஜி அலைக்கற்றை வழக்கில் நியாயம், நீதி வென்றுள்ளது: கனிமொழி

DIN

2ஜி அலைக்கற்றை வழக்கில் நியாயம், நீதி வென்றுள்ளது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உட்பட குற்றம்சாட்டப்பட்ட 14 பேரையும் விடுதலை செய்து தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பை தொடர்ந்து திமுக தொண்டர்கள் ஆங்காங்கே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

இதனிடையே 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியதாவது,
2ஜி வழக்கில் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. 2ஜி வழக்கில் சிபிஐ மேல்முறையீடு செய்தால் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளேன். 2ஜி அலைக்கற்றை வழக்கில் நியாயம், நீதி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

2ஜி அலைக்கற்றை வழக்கை பொய் வழக்கு என திமுக கூறி வந்ததற்கு தீர்வு கிடைத்துள்ளது. வழக்கில் பெரிய அழுத்தம் இருந்தநிலையில் தற்போது நிம்மதி கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT