இந்தியா

நான் அதைச் சொன்னால் நீங்கள் சங்கடப்பட வேண்டி இருக்கும்: ஷாருக்கானை கிண்டலடித்த அம்பானியின் மகன்!

நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் சம்பளம் குறித்து கேள்வி கேட்ட பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' ஷாருக்கானை, நான் அதைச் சொன்னால் நீங்கள் சங்கடப்பட வேண்டி இருக்கும் என்று முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் .. 

DIN

மும்பை: நிகழ்ச்சி ஒன்றில் தனது முதல் சம்பளம் குறித்து கேள்வி கேட்ட பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' ஷாருக்கானை, நான் அதைச் சொன்னால் நீங்கள் சங்கடப்பட வேண்டி இருக்கும் என்று முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த்  கிண்டல் செய்துள்ளார்.   

இந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 40-ஆம் ஆண்டு விழா மற்றும் அதன் நிறுவனர் திருபாய் அம்பானியின் நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சமீபத்தில் மும்பையில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்களில் பாலிவுட் 'சூப்பர் ஸ்டார்' ஷாருக்கானும் ஒருவர். அவர் அந்நிகழ்வின் பொழுது, முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்திடம் உரையாடினார். அப்பொழுது அவர் ஆனந்திடம், 'எனது முதல் சம்பளம் 50 ரூபாய்.உன்னுடையது?' என்று வினவினார்.

அதற்கு ஆனந்த்.'வேண்டாம், விட்டு விடுங்கள்; நான் அதைச் சொன்னால் நீங்கள் சங்கடப்பட வேண்டி இருக்கும்' என்று கிண்டலாக பதிலளித்தார்.

இதன் காரணமாக அந்த அவையே சிரிப்பில் மூழ்கியது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

கோதுமை கையிருப்பு கட்டுப்பாடு மாற்றியமைப்பு: மத்திய அரசு

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

SCROLL FOR NEXT