வேலையில்லாத் திண்டாட்டம்: இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கும் ஓர் இடமுண்டு!
ஆசிய நாடுகளில், வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவேலையில்லாத் திண்டாட்டம்: இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கும் ஓர் இடமுண்டு!
ஆசிய நாடுகளில், வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய இடம் கிடைத்துள்ளது.
புது தில்லி: ஆசிய நாடுகளில், வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய இடம் கிடைத்துள்ளது.
என்ன.. சீனா, ரஷ்யாவைப் போல அல்லாமல், இந்தியா ஒரு நல்ல இடத்தில் இருக்கிறது என்று வேண்டுமானால் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.
அதாவது, 37 ஆசிய நாடுகளில், வேலையில்லாமல் இருக்கும் பொதுமக்களைக் கொண்டிருக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு 12வது இடம் கிடைத்துள்ளது. அதாவது, 2017ல், இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 3.6% என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நமது அண்டை நாடுகளான பூடானில் வேலையில்லாத் திண்டாட்டம் 2.4% ஆகவும், நேபாளில் 3.2% ஆகவும் உள்ளது. பாகிஸ்தானில் 5.9 சதவீதமாக உள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்கவார் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் அமைப்பில் உள்ள புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தியர்கள் அதிகமாக வேலை தேடிச் செல்லும் சௌதி அரேபிய நாடுகளில்தான் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது.
அதாவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ன் வேலையில்லாத் திண்டாட்டம் 3.8%ஆகவும், சௌதி அரேபியாவில் 5.5% ஆகவும் உள்ளது.
இலங்கை 4.6 சதவீதத்துடன் 17வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 5.9 சதவீதத்துடனும், ரஷ்யா 5.3 சதவீதத்துடனும் உள்ளன. ஓமன் தான் 16.9 சதவீதத்துடன் அதிகப் புள்ளிகளுடன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. யேமன் 16 சதவீதத்துடன் அடுத்த இடத்திலும், ஜோர்டான் 14.9 சதவீதத்துடன் அதற்கடுத்த இடத்தையும் பிடித்துள்ளது.