இந்தியா

முதலிரவன்று ரூ.2.5 லட்சம் மதிப்பு நகைகளுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்! 

DIN

கான்பூர்: தனது திருமணநாள் இரவன்று கணவன் வீட்டாரின் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் இளம்பெண் ஒருவர் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

உத்தரபிரதேசத்தின் கான்பூரைச் சேர்ந்தவர் ஷ்யாம் பாபு. இவர் தேவரியா மாவட்டம் சரோஜினி நகரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை  கடந்த 23-ஆம் தேதி அன்று திருமணம் செய்தார். திருமணம் முடிந்த மறுநாள் காலை மணப்பெண்ணை எழுப்புவதற்காக மாப்பிள்ளை வீட்டார் அவரது அறைக்கு சென்றாரகள். ஆனால் அவர் அங்கு காணப்படவில்லை.

அத்துடன் அந்த அறையிலிருந்த கைப்பெட்டி ஒன்றும், அத்துடன் அங்கு இருந்த ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள நகைகளையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவன் வீட்டார் உடனடியாக அவரது அலைபேசிக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அதுவும் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர் .

இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் ஷ்யாம் பாபு நாஜிராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும், அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை ஆய்வாளர் முகேஷ் குமார் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT