பாட்னா: பிகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் அனைவரும், ஆண்டின் முதல் பணிநாளில், தங்களது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.
நிதிஷ் குமார் தனது பெயரில் இருக்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதில், அவரை விட அவரது மகன் நிஷாந்த் பணக்காரராக இருப்பது தெரிய வந்துள்ளது.
நிதிஷ் குமாரின் சொத்துப் பட்டியலில், ரொக்கக் கையிருப்பு, வங்கி இருப்பு, ஃபோர்ட் கார், மாடுகள், ஆடுகள், தில்லியில் இருக்கும் வீடு என 56 லட்சம் அளவுக்கு சொத்துகள் உள்ளன. ஆனால், அவரது மகன் நிஷாந்துக்கு ரூ.2.36 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன.
பிகார் துணை முதல்வரும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவுக்கு ஒரு வாகனம் கூட இல்லை. அதே சமயம் ஏராளமான நிலங்கள் வைத்துள்ளதாக அவரது சொத்துப் பட்டியல் தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.