புதுதில்லி: பட்டம் விட பயன்படும் 'மாஞ்சா' எனப்படும் கண்ணாடித்தூள் தடவப்பட்ட நூலின் பயன்பாட்டிற்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்த தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
பட்டம் விட பயன்படும் 'மாஞ்சா' எனப்படும் கண்ணாடித்தூள் தடவப்பட்ட நூலின் காரணமாக மனித உயிர்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஆபத்து உண்டாவதாக கூறி, 'பீட்டா' உள்ளிட்ட அமைப்புகள் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் 'மாஞ்சா'வை பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து குஜராத்தை சேர்ந்த வியாபாரிங்கள் சங்கம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
அந்த மனுவில் மாஞ்சா பயன்பாட்டிற்கு தடை என்னும் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவானது தகுந்த சட்ட விதிகளை கணக்கில் கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஞ்சா பயன்பாடு என்பது பல தலைமுறைகளாக நடைபெற்று வரும் ஒன்று. இதன் மூலம் மனிதர்களுக்கு, விலங்குகளுக்கோ அல்லது பறவைகளுக்கோ எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம் மனுதாரர்களை தீர்ப்பாயத்திடம் மேல் முறையீடு செய்யுமாறு அறிவுறுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.