இந்தியா

மதுவுக்கு எதிராக பீஹாரில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம்!

பீஹார் மாநிலத்தில் அமல் படுத்தப்பட்டுள்ள மதுவிலக்கு சட்டத்திற்கு ஆதரவாக இன்று மாபெரும் மனித சங்கிலி போராட்டம் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.   

DIN

பாட்னா: பீஹார் மாநிலத்தில் அமல் படுத்தப்பட்டுள்ள மதுவிலக்கு சட்டத்திற்கு ஆதரவாக இன்று மாபெரும் மனித சங்கிலி போராட்டம் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.   

பீஹார் மாநிலத்தில் தேர்தல் சமயத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு ஏற்ப முதல்வர் நிதீஷ் குமார் கடந்த ஆண்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார். இந்நிலையில் மதுவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக இன்று பாட்னாவில் மிகப்பெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.     

பாட்டனாவின் புகழ்பெற்ற காந்தி மைதானத்தில் இன்று நண்பகல் 12.15 மணிக்கு இந்த மனித சங்கிலி  போராட்டம் துவங்கியது. முதல்வர் நிதீஷ் குமார் வண்ண பலூன்களை பறக்க விட்டு நிகழ்வைத் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் கட்சி வேறுபாடின்றி தலைவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் முதல்வர் நிதீஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு ப்ரசாத் யாதவ் மற்றும் சட்டப்பேரவை சபாநாயகர் விஜய் குமார் சவுத்திரி ஆகிய இருவருடனும் கை கோர்த்து நின்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அணுசக்தி திட்டம்: ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு

லாட்டரி விற்றவா் கைது

தேசிய தற்காப்புக்கலை, யோகா போட்டிகள் 1900 மாணவ- மாணவிகள் பங்கேற்பு

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

வேளாங்கண்ணிக்கு மும்பையிலிருந்து சிறப்பு ரயில்

SCROLL FOR NEXT