இந்தியா

டிவிட்டரில் இது புதுசு: குடியரசு தின சிறப்பு எமோஜி!

நாளை இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிறப்பு எமோஜியை பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. 

DIN

புதுதில்லி: நாளை இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சிறப்பு எமோஜியை பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டர் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக அந்நிறுவனத்தின் பொதுக் கொள்கை மற்றும் அரசு பிரிவுத் தலைவர் மஹிமா கவுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நாளை குடியரசு தினத்தை கொண்டாட உள்ள இந்தியர்களுக்கு, அது தொடர்பான உரையாடல்களை டிவிட்டரில் மேற்கொள்ளும் போது பயன்படுத்த புதிய எமோஜியை வழங்குவதில் மகிழ்கிறோம்.

இந்த எமோஜியானது இந்திய தேசிய கொடியை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனாளர்கள் #RepublicDay or #HappyRepublicDay or #RepublicDay2017  உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தும் பொழுது இது தானாகவே தோன்றும்.

இந்த எமோஜியானது  வரும் 27-ஆம் தேதி வரை பயன்பாட்டிலிருக்கும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT