முகப்பு
இந்தியா

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:20 PM
பகிர்:

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  

தெற்கு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வந்ததையடுத்து போலீசாரும், ராணுவத்தினரும் அங்கு விரைந்தனர். அப்போது வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் தக்க பதிலடி கொடுத்தனர். 

இருத்தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
 

முழு கட்டுரையைப் படிக்க →