இந்தியா

கேரள நடிகை கடத்தல் வழக்கு: இருவரின் காவல் நீட்டிப்பு

DIN

பிரபல கேரள நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் காவலையும் வரும் 18-ஆம் தேதி வரை கேரள நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் தேதி தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகை புறப்பட்டார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், அந்த நடிகையை கடத்திச் சென்று அவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், காரில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாவனா அங்கிருந்து தப்பினார்.
இந்தச் சம்பவம் குறித்து நடிகை புகார் அளித்ததன் பேரில், இதில் தொடர்புடையதாக 'பல்சர்' சுனி, மார்ட்டின், விஜீஷ் உள்ளிட்ட 6 பேரை கொச்சி போலீஸார் கைது செய்தனர். இவர்களில் பல்சர் சுனி, விஜீஷ் ஆகியோரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்குமாறு அங்கமாலி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அவர்களின் நீதிமன்றக் காவல் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் அங்கமாலி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர்களை வரும் 14-ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். முன்னதாக, இந்தக் கடத்தல் வழக்கு தொடர்பாக மலையாள நடிகர் திலீப் மற்றும் இயக்குநர் நதீர்ஷா ஆகியோரிடம் போலீஸார் அண்மையில் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT