இந்தியா

புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம்: மத்திய அரசு அறிவிப்பு!

DIN

புதுதில்லி: இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்படுவதாக மத்திய சட்டத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்பொழுது தலைமை தேர்தல் ஆணையராக உள்ள நஜீம் சைதியின் பதவிக்காலம் வரும் 8-ஆம் தேதியோடு முடிவடைகிறதது. எனவே அவருக்குப் பதிலாக புதிய தலைமை தேர்தல் ஆணையராக வரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் மத்திய சட்ட அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக அச்சல் குமார் ஜோதி நியமனம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தினைச் சேர்ந்த குமார், 1975-ஆம் ஆண்டு இந்திய ஆட்சி பணிக்கு தேர்வானவராவார்.

இவர் குஜராத் மாநிலத் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவராவார். குமார் வரும் 9-ஆம் தேதியன்று பதவி ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT