முகப்பு
இந்தியா

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள் விவகாரம்: மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்! 

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியால் பாரதிய ஜனதா கட்சியின் மூன்று உறுப்பினர்கள் நியமன எம்.எல்.ஏக்களாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில், புதுச்சேரி மாநில அரசு மற்றும் மத்திய அரசு ...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:21 PM
பகிர்:

சென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியால் பாரதிய ஜனதா கட்சியின் மூன்று உறுப்பினர்கள் நியமன எம்.எல்.ஏக்களாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில், புதுச்சேரி மாநில அரசு மற்றும் மத்திய அரசு இரண்டும் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு மூன்று உறுப்பினர்களை நியமன எம்.எல் .ஏக்களாக நியமிக்க சட்டத்தில் இடம் உண்டு. ஆனால் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக உள்ள கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமியை கலந்து ஆலோசிக்காமல் நேற்று மாலை திடீரென்று, பாரதிய ஜனதா கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் சுவாமிநாதன், பொருளாளர் சங்கர் மற்றும் பாஜக ஆதரவாளர் செல்வகணபதி ஆகிய மூவரையும் நியமன எம்.எல்.ஏக்களாக அறிவித்தார். அத்துடன் அதிரடியாக இன்று காலை எட்டுமணி அளவில் துணை நிலை ஆளுநர் அலுவலகத்தில் அம்மூவருக்கும் பதவி பிரமாணமும் செய்து வைத்ததார்.

அதே நேரத்தில் முதலவரை கலந்து ஆலோசிக்காமல், தண்னிச்சையாக இம்முடிவுகளை எடுக்க துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறி, காங்கிரஸ் எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கினை இன்று விசாரித்த நீதிமன்றம் நியமன எம்.எல்.ஏக்கள் மூவர், புதுச்சேரி மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஆகிய மூவரும் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.