இந்தியா

கோவாவில் கிறிஸ்துவ கல்லறையில் உள்ள சமாதிகளை சேதப்படுத்திய விஷமிகள்! 

கிழக்கு கோவாவில் அமைந்துள்ள கர்கோரெம் பகுதியில் உள்ள கிறிஸ்துவ கல்லறையில் உள்ள சமாதிகளை விஷமிகள் சேதப்படுத்திய  சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

PTI

பனாஜி: கிழக்கு கோவாவில் அமைந்துள்ள கர்கோரெம் பகுதியில் உள்ள கிறிஸ்துவ கல்லறையில் உள்ள சமாதிகளை விஷமிகள் சேதப்படுத்திய  சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இது குறித்து கர்கோரெம் காவல்நிலைய ஆய்வாளர் ஷிவ்ராம் வைகாங்கர் தெரிவித்ததாவது:

கிழக்கு கோவாவின் கர்கோரெம் பகுதியில் கார்டியன் ஏஞ்சல் கிறிஸ்துவ கல்லறை அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு நுழைந்த மர்ம மனிதர்கள் சிலர் சமாதிகளில் உள்ள கற்களை சேதப்படுத்தியுள்ளனர். கல்லறை வாசலில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காமிராவையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

அதிகாலை 4.30 மணி அளவில் ஒரு நபர் கல்லறையில் இருந்து தப்பித்து ஓடிய காட்சியினை உள்ளூர் வாசிகள் சிலர் பார்த்துள்ளனர். பல்வேறு தகவல்களின் அடிப்படையில் விசாரணையை தொடர்ந்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கிழக்கு கோவாவில் இந்த மாத துவக்கத்திலிருந்தே மத அடையாளங்கள் மீது அவமரியாதை செலுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுவரை 9 சிலுவைகள் மீதும், கோயில் ஒன்றின் மீதும் இத்தகைய சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் பதட்டம் நிரம்பிய இடங்களில் காலவல்துறை ரோந்தினை அதிகரிக்குமாறும், காவல் நிலையங்களில் சிறப்பு விசாரணை குழுவினை உண்டாக்குமாறும் முதல்வர் மனோகர் பாரிக்கர் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கத்தாகுறிச்சியில் காசநோய் எதிா்ப்பு வார உறுதிமொழி

நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

பண மோசடி வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனை

அமைச்சா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: விசாரணை மாா்ச் 3-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT