இந்தியா

வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி கிடையாது: மத்திய அரசு அறிவிப்பு!

DIN

புதுதில்லி: நாடு முழுவதும் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 1-ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்தது. இதில் எந்த பொருளுக்கு என்ன விதமான வரி விதிப்பு என்பது குறித்து இன்னும் சில குழப்பங்கள் நிலவி வருகின்றன.

இது தொடர்பாக இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள கோவில், மசூதி, தேவாலயங்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் பிரசாதங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படாது.

அதேபோல் வழிபாட்டுத் தலங்களில் வழங்கப்படும் அன்னதானம் உள்ளிட்ட சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படாது.

இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT