இந்தியா

கண்டலேறு அணையிலிருந்து நீர் திறக்க இயலாது: ஆந்திர அரசு கைவிரிப்பு!

அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லாமல் குடிநீருக்கு சென்னை தவித்து வரும் வேளையில், கண்டலேறு அணையிலிருந்து நீர் திறக்க இயலாது என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

DIN

சென்னை: அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லாமல் குடிநீருக்கு சென்னை தவித்து வரும் வேளையில், கண்டலேறு அணையிலிருந்து நீர் திறக்க இயலாது என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் நான்கு நீர்த்தேக்கங்களில் போதுமான அளவு நீர் இருப்பு இல்லை. எனவே குடிநீர் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் நிலையில்தான் சென்னை உள்ளது. எனவே அண்டை மாநிலமான ஆந்திராவிடம் இருந்து கிருஷ்ணா நதிநீர் நீர் திறந்து விடப்படுமென்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் ஆந்திர அரசு இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதுள்ள நிலையில் கண்டலேறு அணையிலிருந்து நீர் திறக்க இயலாது. அணையின் நீர் இருப்பு 4.65 டி.எம்.சி மட்டுமே உள்ளது. எனவே 150 கி.மீ தொலைவில் இருந்தாலும் சென்னைக்கு நீர் திறகக இயலாத  நிலையில் உளோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை நட்சத்திர விடுதியில் தீ விபத்து: கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT