இந்தியா

பணப்பரிமாற்றத்துக்கான கட்டணங்களில் அதிரடி மாற்றம் செய்யும் ஸ்டேட் பாங்க்!

DIN


புது தில்லி: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணையதளம் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்கள் இனி 75% அளவுக்குக் குறைவான கட்டணம் செலுத்தினால்  போதும்.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணையதளம் அல்லது செல்போன் ஆப்-பை பயன்படுத்தி என்இஎஃப்டி (NEFT) மற்றும் ஆர்டிஜிஎஸ் (RTGS) மூலமாக ஒரு வங்கிக் கணக்கில் மருந்து மற்றொரு வங்கிக் கணக்குக்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன.

டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ஸ்டேட் பாங்க் மேற்கொண்டுள்ளது.

முன்பு, ரூ.10 ஆயிரம் வரை என்இஎஃப்டியில் பணப்பரிமாற்றம் செய்ய ரூ.2 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனி இது ரூ.1 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. (ஜிஎஸ்டி 18 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும்). என்இஎஃப்டியில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கு இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த ரூ.4 கட்டணம் தற்போது ரூ.2 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதே போல, ஆர்டிஜிஎஸ் மூலமாக ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான பணப்பரிமாற்றத்துக்கான கட்டணமும், ரூ.20ல் இருந்து ரூ.5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. முந்தையக் கட்டணத்தோடு ஒப்பிடுகையில் இது 75% கட்டணக் குறைப்பாகும்.

டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும், வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த கட்டணக் குறைப்பு செய்யப்பட்டிருப்பதாக எஸ்பிஐ உயர் அதிகாரி தெரிவித்தார்.

முன்னதாக, இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலமாக ஐஎம்பிஎஸ் எனப்படும் உடனடி பணப்பரிமாற்றத்துக்கான கட்டணத்தை ஜூலை 1ம் தேதி முதல் மாற்றியமைத்தது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

விவரம் அறிய.. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT