இந்தியா

நாடு கடத்தப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி மும்பையில் கைது

DIN

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி சலீம் முனீர் கானை போலீஸார் மும்பையில் கைது செய்தனர்.
இவர், சிஆர்பிஎஃப் முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சலீம் முனீர் கான். லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவரான இவர், உத்தரப் பிரதேசத்தில் சிஆர்பிஎஃப் முகாம் மீது கடந்த 2008-ஆம் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர் ஆவார்.
இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்ற முனீர் கான், அந்நாட்டுத் தலைநகர் அபுதாபியில் உள்ள தனியார் நிறுவத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், முனீர் கான், போலியான பயண ஆவணங்களை வைத்திருந்தது தெரியவந்ததை அடுத்து அவரை ஐக்கிய அரபு அமீரக நாட்டு அதிகாரிகள் அங்கிருந்து நாடு கடத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலை மகாராஷ்டிர மற்றும் உத்தரப் பிரதேசக் காவல் துறையினருக்கு உளவு அமைப்புகள் தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்த முனீர் கானை போலீஸார் கைது செய்தனர். அவர் தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக மகாராஷ்டிர காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

பழனி ரோப் காா் சேவை இன்று ஒரு நாள் நிறுத்தம்!

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

SCROLL FOR NEXT