இந்தியா

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி?: எல்லையோர வர்த்தக நடவடிக்கைகளை விசாரிக்கும் வருவாய்த் துறையினர்

DIN

பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டுவதற்காக இந்திய - பாகிஸ்தான் எல்லைகளிடையே சந்தேகத்துக்குரிய வகையில் நடைபெறும் வர்த்தக நடவடிக்கைகளை வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து விசாரித்து வரும் தேசியப் புலனாய்வு அமைப்பினருக்கு (என்ஐஏ) உதவும் வகையில் அவர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதச் சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி அளிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் மட்டுமன்றி நூதன முறையில் நிதி திரட்டும் நடவடிக்கைகளும் நடந்து வருவதாகத் தெரிகிறது.
குறிப்பாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியாவுக்கு பாதாம் பருப்பு வர்த்தகம் செய்யப்படுகிறது. ஒரு கிலோ பாதாம் பருப்பின் விலை ரூ.650 வரை இருக்கலாம். ஆனால், அவை ரூ.250-க்கு விற்கப்பட்டதாக ரசீதுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று மற்ற சில பொருள்களுக்கு அதிகப்படியான விலை கொடுத்து வாங்கப்படுகிறது. இத்தகைய சந்தேகத்துக்குரிய வர்த்தக நடவடிக்கைகளின் வாயிலாக மறைமுகமாக பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டப்படுவதாகத் தெரிகிறது.
இதையடுத்து, இந்திய வருவாய்ப் பணி அதிகாரிகளின் துணையுடன் இந்த விவகாரங்களை விசாரிக்க மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, சில வழக்குகள் மீதான விசாரணையை வருவாய்த் துறை அதிகாரிகளும், சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சில சந்தேகத்துக்குரிய வர்த்தக நடவடிக்கைகளை விசாரிக்க கூடுதல் எண்ணிக்கையிலான அதிகாரிகளை நியமிக்கப் போவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பயங்கரவாதத்துக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளின் பின்னணியில் பெரும்பாலும் காஷ்மீர் பிரிவினைவாதிகளே இருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT