இந்தியா

மணிப்பூரில் பாஜகவில் இணைந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள்!

DIN

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில், ஆளும் பாஜகவில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இணைந்துள்ளனர்.
இது, அந்த மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியமைத்துள்ள பாஜக கூட்டணி அரசுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்களான ஷேத்ரிமயூம் பிரேன் சிங், பெளனம் புரோஜென் ஆகிய இருவரும் பாஜகவில் கடந்த சனிக்கிழமை இணைந்தனர். இதன்மூலம், மாநிலத்தில் பாஜக உறுப்பினர்களின் பலம் 31-ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை மாநில செய்தித் தொடர்புத் துறை அமைச்சர் விஷ்வஜித் சிங், செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். 60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப் பேரவையில், பிரேன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் பலம் 40-ஆக அதிகரித்துள்ளது. பாஜக கூட்டணியில் தற்போது, பாஜகவைச் சேர்ந்த 31 உறுப்பினர்களும், நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர் ஒருவரும் உள்ளனர்.
நிகழாண்டில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 28 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அவர்களில், 8 பேர் பாஜகவில் இணைந்ததை அடுத்து, மணிப்பூர் பேரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 20-ஆகக் குறைந்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT