இந்தியா

சீன எல்லையில் 73 சாலைகள் அமைப்பு: மக்களவையில் அமைச்சர் தகவல்

DIN

சீன எல்லையில் செயல்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 73 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது: சீன எல்லையில் செயல்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் 73 சாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் 46 சாலைகளும், உள்துறை அமைச்சகம் சார்பில் 27 சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 30 சாலைகள் முழுமை பெற்றுள்ளன. இந்த சாலைகள் அனைத்தும் கடந்த 2012-13-ஆம் ஆண்டிலேயே அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், சாலைப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் நிலவி வரும் கடும் குளிர், மலைப்பகுதிக்கு கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல், வனப்பகுதியில் மரங்களை அகற்றுவது, நிலம் கையகப்படுத்துவது போன்ற பிரச்னைகள் இருந்தன. சாலை அமைக்கும் பணியை உயர்நிலைக் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

SCROLL FOR NEXT