இந்தியா

மம்தாவின் சவால் பகல் கனவாகிவிடும்: பிரகாஷ் ஜாவடேகர்

DIN

தேசத்திலிருந்து பாஜகவை வெளியேற்ற வேண்டும் என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சவால் பகல் கனவாகிவிடும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற மம்தாவின் சவால் பகல் கனவாகிவிடும்.
பிரதமர் மோடி ஏழைகளுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அவர்களின் நலன்களில் அவர் அக்கறை செலுத்தி வருகிறார். நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் மக்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. மேற்கு வங்கத்தில் பாஜகவில் இணைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைக் கண்டு மம்தா பானர்ஜி விரக்தி அடைந்துவிட்டார். பாஜகவையும், பிரதமர் மோடியையும் தாக்கிப் பேசுவது ஒன்றே அவரது குறிக்கோள் ஆகும். பிரிவினை அரசியலில் மம்தா ஈடுபடுகிறார்.
ஜாதி, மத ரீதியாக மக்களிடம் மம்தா பிரிவினையை ஏற்படுத்த முயலுவதை வேதனைக்குரிய ஒன்றாகக் கருதுகிறேன். இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மத ஒற்றுமை நமது ஜனநாயகத்தின் சாராம்சங்களில் ஒன்று. ஜனநாயகத்துக்கு இது மிக முக்கியமானதாகும். மேற்கு வங்கத்தில் ஏழ்மை நிலை பரவி வருகிறது. அதேநேரம், ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்றார் ஜாவடேகர்.
முன்னதாக, பாஜகவை இந்தியாவை விட்டு வெளியேற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT