இந்தியா

4 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு: மத்திய அரசு

DIN

இந்தியாவில் இதுவரை 4 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் பக்கன் சிங் குலஸ்தே அளித்த பதில் வருமாறு:
குஜராத் மாநிலம், ஆமதாபாதின் பாபுநகர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி உள்ளிட்ட 3 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உள்ளது. இதேபோல், தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளது.
ஜிகா வைரஸால் பாதிக்கப்படும் சிலருக்குதான், நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும். இது 'கில்லியன் பார்ரே' என்று அழைக்கப்படுகிறது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம் என்று அந்த பதிலில் பக்கன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT