இந்தியா

ரூ.200 நோட்டு விரைவில் வெளியீடு: ரூ.2,000 நோட்டு வாபஸ் இல்லை

""புழக்கத்தில் விடப்பட்டுள்ள ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டமில்லை; புதிய ரூ.200 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்'' என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறினார்.

DIN

""புழக்கத்தில் விடப்பட்டுள்ள ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டமில்லை; புதிய ரூ.200 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்'' என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறினார்.
உயர் மதிப்புடைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வாபஸ் பெறப்பட்ட பிறகு, உடனடியாக ரூ.2,000 நோட்டுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், புதிய ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்காக, புதிதாக ரூ.2,000 நோட்டுகளை அச்சடிப்பதை மத்திய அரசு நிறுத்தி விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்தன.
இதுதொடர்பாக, மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில், ரூ.2,000 நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டமில்லை என்று மத்திய நிதித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் கூறினார்.
இதுதொடர்பாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:
ரூ.2,000 நோட்டுகள் அச்சடிப்பது குறைந்து விட்டதாகக் கூறுவது வேறு விஷயம். அதை முதலில் ரிசர்வ் வங்கியிடம் உறுதிபடுத்த வேண்டியுள்ளது. அதுதொடர்பாக, ரிசர்வ் வங்கி விளக்கம் அளிக்கும். மேலும், சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், புதிய ரூ.200 நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.
இதனிடையே, புதிய ரூ.2,000 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப்பெற வாய்ப்பில்லை; அவை புழக்கத்தில் இருக்கும் என்று நிதித் துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், ரூ.2,000 நோட்டுகளை குறைந்த அளவிலேயே புழக்கத்தில் விடுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
ரூ.200 ஆகஸ்டில் வெளியீடு?: இதனிடையே, புதிய ரூ.200 நோட்டுகள், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படவுள்ளன என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
""கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமான அச்சகத்தில் இருந்து புதிய ரூ.200 நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு, கடந்த மாதமே தயாராகிவிட்டது. அந்த நோட்டுகள், அடுத்த மாதம் (ஆகஸ்ட்) புழக்கத்துக்கு விடப்படும்'' என்றும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT