முகப்பு
இந்தியா

வால்மீகி பற்றி சர்ச்சைக்குரிய கருத்து கூறிய கவர்ச்சி நடிகைக்கு பிடிவாரண்ட்!

இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய பாலிவுட் கவர்ச்சி நடிகை ...

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:39 PM
பகிர்:

லூதியானா: இந்திய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்திற்கு, லூதியானா நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர இயலாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளிலொருவர் ராக்கி சாவந்த். அத்துடன் அப்பொழுது தனது அதிரடியான சர்சைக்குரிய  கருத்துக்கள் மூலமும் புகழ்பெற்றவர். கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் ராக்கி பங்கேற்றார். அப்பொழுது ராமாயணம் எழுதிய வால்மீகி குறித்து ஆபாசமான ஒரு கருத்தை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ராகி சாவந்த் இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசியதாக பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த நரிந்தர் ஆதியா என்பவர் அம்மாநிலத்தின் லூதியயானா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் வால்மீகி சமூகத்துக்கு எதிராகவும் இந்து மதத்தை புண் படுத்தும் வகையிலும் ராக்கி சாவந்த் பேசி வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக குறித்து லூதியானா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு பலமுறை ராக்கி சாவந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராவதை ராக்கி சாவந்த் தொடர்ச்சியாக தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் இன்று ராக்கி சாவந்திற்கு லூதியானா நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர இயலாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →