இந்தியா

முறைகேடு அம்பலம்: பணியிட மாற்றத்துக்கு லஞ்சம் வாங்கிய ராணுவ அதிகாரி கைது

ராணுவத்தில் பணியிட மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கியக் குற்றச்சாட்டின் கீழ் லெப்டினன்ட் கர்னல் ஆர்எஸ் மோனி என்பவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

PTI


புது தில்லி: ராணுவத்தில் பணியிட மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கியக் குற்றச்சாட்டின் கீழ் லெப்டினன்ட் கர்னல் ஆர்எஸ் மோனி என்பவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

ராணுவ தலைமையகத்தில், பணியிட மாற்றம் பெற ராணுவ அதிகாரிகளும், வீரர்களும் லட்சக்கணக்கான ரூபாய்களை லஞ்சமாகக் கொடுத்த விவகாரம் நேற்று வெளிச்சத்துக்கு வந்தது. இந்தக் குற்றச்சாட்டின் கீழ் இடைத்தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வுத் துறையினர் திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள சிபிஐ, லெப்டினன்ட் கர்னல் ரங்கநாதன் சுவ்ரமணி மோனி மற்றும் கௌரவ் கோலி என்பவரையும் ரூ.2 லட்சம் லஞ்சப் பணத்தை வாங்கும் போது கைது செய்தனர். பெங்களூருவைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரை பணியிட மாற்றம் செய்ய இந்த பணம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த முறைகேட்டு விவகாரத்தில் குற்றவாளிகளின் பட்டியலில் பிரிகேடியர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்து, அவரது பெயர் பதிவு செய்யப்படவில்லை. மேலும் பல அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாயமான நகைக்கடை ஊழியா் கிணற்றில் சடலமாக மீட்பு

நகை மதிப்பீட்டாளா் அடித்துக் கொலை

கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்து விட்டு இளைஞா் தற்கொலை

வேலூா் மாநகராட்சியில் ரூ.2.06 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்!

மின்வாரிய ஊழியருக்கு கத்திகுத்து: 2 போ் கைது

SCROLL FOR NEXT