FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எதிரணியின் பாராட்டைப் பெற்ற பார்சிலோனா வீரர்!

ஆட்ட நாயகன் விருது வென்ற பார்சிலோனா வீரர் குறித்து...

பார்சிலோனா வீரர் பெத்ரி. - படம்: எக்ஸ் / எஃப்சி பார்சிலோனா.
பகிர்:

கெட்டாஃபே அணிக்கு எதிரான கால்பந்துப் போட்டியில் பார்சிலோனாவின் மிட்ஃபீல்டர் பெத்ரி ஆட்ட நாயகன் விருது வென்றார். ’பார்சிலோனாவின் வைரம்’ என பெத்ரியை ரசிகர்கள் செல்லமாக அழைக்கிறார்கள்.

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்துத் தொடரில் பார்சிலோனா அணி கெட்டாஃபே அணியை 2-0 என வீழ்த்தியது. இதன் மூலம் கோப்பை வெல்லும் போட்டியில் 11 புள்ளிகள் முன்னிலை வகித்துள்ளது.

கெட்டாஃபே அணி தனது சொந்த மண்ணில் கொலிசியம் அல்போன்சோ பெரெஸ் கால்பந்துத் திடலில் பார்சிலோனா அணியுடன் மோதியது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் இதில் 45+1ஆவது நிமிஷத்தில் பெத்ரியின் அசிஸ்ட் மூலமாக ஃபெர்மின் லோபஸ் கோல் அடித்து அசத்தினார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய பெத்ரி 89ஆவது நிமிஷத்தில் மாற்றுவீரருக்காக வெளியேற்றப்பட்டார். அப்போது எதிரணியினர் உள்பட அனைவரும் எழுந்து நின்று உற்சாகம் அளித்தார்கள்.

பந்தினை பாஸ் செய்வதில் துல்லியமாக செயல்பட்ட பெத்ரிக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்தப் போட்டியில் டிஃபெண்டர் பா குபார்சி மிகவும் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது அளித்திருக்கலாம் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

summary

A standing ovation from Getafe fans for barcelona Midfielder Pedri

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments