அபார (5-0) வெற்றியுடன் சீசனை தொடங்கிய பார்சிலோனா..! ஆட்ட நாயகன் விருது வென்ற கேப்டன்
பார்சிலோனா கால்பந்து அணி தனது முதல் போட்டியிலேயே அபார வெற்றியுடன் தொடங்கியது குறித்து...
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா 2026-27 சீசனில் பார்சிலோனா கால்பந்து அணி தனது முதல் போட்டியிலேயே 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியுடன் தொடங்கியது.
கடந்த 2025-26 சீசனில் கோப்பை வென்ற பார்சிலோனா அணி மீண்டும் இந்த முறையும் கோப்பை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ளது.
லா லிகாவில் பார்சிலோனா அணி தனது முதல் போட்டியில் எல்சி உடன் மோதியது. இந்தப் போட்டியில் 5-0 என வென்றது. அணியின் கேப்டன் ரபீனியா 14, 67ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார்.
Advertisement
Advertisement
ஃபெர்மின் லோபஸ் 71, 79ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்தினார். கரீம் அடேயமி 45+3ஆவது நிமிஷத்தில் ஒரு கோல் அடித்தார்.
ரபீனியா 2 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து அசத்தினார். அவர் உலகக் கோப்பையில் காயம் காரணமாக கடைசி சில போட்டிகளில் விளையாடமால் இருந்தார்.
கால்பந்து உலகக் கோப்பையில் ஸ்பெயின் அணி த்ரில் வெற்றி பெற்றது. இதில் பாதி பேர் பார்சிலோனா அணியில் இடம்பிடித்திருந்தவர்கள். இவர்களுக்கு எல்சி அணியினர் பதக்கம் வழங்கி பாராட்டு செய்தது கவனிக்கத்தக்கது.
5-0: Barcelona kicks off the La Liga season with a stunning victory!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.