இந்தியா

விவசாயிகளின் குடும்பங்களை சிவாராஜ் சிங் சௌஹான் நேரில் சென்று ஆதரவு

DIN

போபால்: மத்தியப்பிரதேச மாநிலம் மண்ட்சோர் நகரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை முதல்வர் சிவாராஜ் சிங் சௌஹான் இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

விவசாயக் கடன் தள்ளுபடி என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மந்த்சௌரில் கடந்த 6-ஆம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை மூண்டது. இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 விவசாயிகள் பலியாகினர். இந்த சம்பவத்தால், மந்த்சௌரில் பெரும் பதற்றம் நிலவுவதை கருத்தில் கொண்டு, அங்கு தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டுமென ஞாயிற்றுக்கிழமை, சௌஹான், காலவரையற்ற உண்ணாவிரத்தை துவங்கினார், அடுத்த நாள் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

இதையடுத்து விவசாயிகள் மீது நடத்தப்பட்ட வன்முறை குறித்து நீதி விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.கே. ஜெயின் தலைமையில் ஒரு நபர் விசாரணைக்கு குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டது.

இவர் எந்த சூழ்நிலையில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்ற விசாரணையையும், நிலைமைய கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும் கமிஷன் விசாரணை நடத்தப்படும் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இன்று மண்ட்சோர் நகரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களை முதல்வர் சிவாராஜ் சிங் சௌஹான் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT